அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு-தொழிலில் கவனம் செலுத்த முடிவு-மா ஃபா பாண்டியராஜன்

அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு-தொழிலில் கவனம் செலுத்த முடிவு-மா ஃபா பாண்டியராஜன்
X

மா ஃபா பாண்டியராஜன் உடன் அவரது மனைவி

தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தனது தொழிலை முழு மூச்சாக கவனிக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன்.

தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் தனது தொழிலை முழுமூச்சாக கவனிக்க முடிவு செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன். அங்கே., இங்கே., எங்கே எல்லாமோ ஒட்டியபடி அரசியலில் லைம் லைட்டில் இருந்த மா ஃபா பாண்டியராஜன் மீண்டும் வணிக பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

மாஃபா எனும் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர் பாண்டியராஜன். பாஜக , தேமுதிக, அதிமுக என்று அடுத்தடுத்த அரசியல் பயணங்களில் கவனம் செலுத்தி வந்தவர், தீவிர அரசியலில் இறங்கியதால் அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாண்டியராஜன், கட்சியினரின் உள்ளடி வேலைகளால்தான் தோல்வி அடைந்ததாக கடும் அதிருப்தியில் இருந்தார்.

தீவிர அரசியலுக்கு வந்ததால் மாஃபா மற்றும் சி.எல். மனிதவள நிறுவனத்தின் பொறுப்புகளை தனது மனைவி மற்றும் பிறரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது மீண்டும் மாபா- சி.எல். நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார். இந்தியாவில் 40 இடங்களில் 56 அலுவலகங்களை கொண்டு இயங்கும் சி.எல். குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


" நான் அமைச்சராக இருந்ததால் என்னால் நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. தீவிர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். தொழிலை கவனிக்க முடியாமல் போனது. இப்போது தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்து மீண்டும் பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு அளிக்கவுள்ளேன். அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள பொறுப்புகளில் தொடர்வேன்" அப்படீன்னு சொல்லி இருக்கின்றார்.

தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் அவர் தொழில்துறைக்கு திரும்பியிருப்பதை வரவேற்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்