/* */

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியல்! எல்லாமே கோடியில் தான்!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து பட்டியல்! எல்லாமே கோடியில்  தான்!
X

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தற்போது வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், நேற்று ஒரே நாளில் சுமார் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

விஜய பிரபாகரன்:

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும், மறைந்த நடிகர் விஜயகாந்த் மகனுமான விஜய பிரபாகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.17 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.11.38 கோடி அசையும் சொத்து என்றும், ரூ.6.57 கோடி அசையா சொத்து எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதா விஜயகாந்த் பெயரில் ரூ.6.49 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.48 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருக்கின்றன. கடனை பொறுத்த அளவில், விஜய பிரபாகரனுக்கு ரூ.12 கோடி கடனும், பிரேமலதா விஜயகாந்த்துக்கு ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேவநாதன்:

அதேபோல சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனுக்கு ரூ.300 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இவரது மனைவி பெயரில் ரூ.25 கோடியும், மகள் இருவரின் பெயரில் தலா ரூ.40 கோடியும் இருக்கின்றன.

கார்த்தி சிதம்பரம்:

இந்த தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.127 கோடி சொத்து இருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்:

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ரூ.19 கோடி சொத்து இருப்பதாகவும், அவரது கணவருக்கு ரூ.3.92 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையா சொத்துக்களை பொறுத்த அளவில் தமிழிசை பெயரில் ரூ.60 மதிப்பிலும், அவரது கணவர் பெயரில் ரூ.13.70 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்:

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.21.92 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.14.03 கோடி அசையும் சொத்து, ரூ.7.89 கோடி அசையா சொத்து; தனது குடும்பத்துக்கு ரூ.5.13 கோடி கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்:

இது தவிர கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7.63 கோடி சொத்து இருப்பதாகவும் அதில் ரூ.6.99 கோடிக்கு அசையா சொத்துகளும், ரூ.64 லட்சத்திற்கு அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு எந்தவித கடனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டி.ஆர்.பாலு:

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் சொத்து மதிப்பு ரூ.45.71 கோடி என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ரூ.5.51 கோடிக்கு அசையும் சொத்து, ரூ.40.21 கோடிக்கு அசையா சொத்து; ரூ.8.06 கோடிக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சௌமியா அன்புமணி:

அதேபோல பாமக வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணிக்கு ரூ.48.18 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ரூ.6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அருண் நேரு:

பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு ரூ.46.20 கோடி சொத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதில் கையிருப்பில் ரூ.2.14 லட்சம் ரொக்கமும், ரூ.27.11 கோடி முதலீடுகளிலும் செலுத்தியிருக்கிறார். இவருக்கு 7 வங்கி கணக்குகள் இருக்கின்றன. இது தவிர சுமார் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 480 கிராம் தங்கமும் வைத்திருக்கிறார்.

ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணி வேட்பாளர்

தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.36,47,81,921 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி லலிதா லட்சுமி பெயரில் 37,40,50,259 ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம். அதேபோல, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.41,99,68,000 மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ.36,89,86,638 மதிப்பிலும் இருப்பதாக பட்டியலிட்டிருக்கிறார் ஏ.சி.சண்முகம். ஆக மொத்தம் கிட்டத்தட்ட கணவன், மனைவி இருவரது பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக 152 கோடியே 77 லட்சத்துக்கு சொத்துகள் இருப்பதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது.

கதிர் ஆனந்த் திமுக வேட்பாளர்

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தனது பெயரில் 32,77,55,392 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது மனைவி சங்கீதா பெயரில் 7,40,26,873 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் கணக்குக் காட்டியிருக்கிறார். அதேபோல, தனது பெயரில் 28,38,19,024 ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், ‘சுயமாக சம்பாதித்தது மற்றும் பரம்பரைச் சொத்துகள்தான் அவை’ என்றும் தெரியப்படுத்தியிருக்கிறார் கதிர் ஆனந்த். அதேபோல மனைவி சங்கீதா பெயரில் 18,38,62,332 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆக மொத்தம் கிட்டத்தட்ட கணவன், மனைவி இருவரது பெயரிலும் மொத்தமாக 86 கோடியே 94 லட்சத்துக்கு அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது.

Updated On: 26 March 2024 11:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனமான பொருளை தூக்கினால் அதீத வயிற்று வலி ஏற்படுகிறதா? - ஒரு எச்சரிக்கை...
  2. லைஃப்ஸ்டைல்
    எதுக்கு நீண்ட தூரம் வாக்கிங் போறீங்க? வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்கள் பளிச்சிட வேணுமா? - இந்த...
  4. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான மொறு மொறு ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
  5. இந்தியா
    சிக்கிமில் ஆளும் கட்சி அபார வெற்றி, அருணாச்சல பிரதேசத்தை அசால்ட்டாக...
  6. வீடியோ
    🔴LIVE : ADMKவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது! IPDS திருநாவுக்கரசு...
  7. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  8. வீடியோ
    🔴LIVE : அடுத்த கட்ட நகர்வு அரசியலா? | Raghava Lawrence பரபரப்பு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  10. திருவள்ளூர்
    சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!