மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக இந்திய கம்யூ. வாக்கு சேகரிப்பு

மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக இந்திய கம்யூ. வாக்கு சேகரிப்பு
X

திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்.

மதிமுக வேட்பாளர் துரை வைகோவிற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று துரை வைகோவிற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இண்டியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மறுமலர்ச்சி திமுக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருச்சி மாநகர் முழுவதும் உள்ள 65 வார்டுகளிலும் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியினை ஏப்ரல் 7ஆம் தேதி துவங்கினர் வருகிற 14 ம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது.

ஏப்ரல் 10ல் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 9வது வார்டில் செயலாளர் ஆனந்தன் தலைமையில் 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மேற்கு பகுதி பொருளாளர் ரவீந்திரன் பகுதி குழு உறுப்பினர்கள் நாகராஜன் ,ராமமூர்த்தி...24வது வார்டில் செயலாளர் துரைராஜ் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமிதுணைச் செயலாளர் முருகன்பகுதி குழு உறுப்பினர்கள் தர்மு,ராஜேஸ்வரி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அபிஷேகபுரம் பகுதியில் செயலாளர் அஞ்சுகம் தலைமையிலும் ,கிழக்கு சட்டமன்ற தொகுதியில்அபுதாஹிர் தலைமையிலும் காந்தி மார்க்கெட் பகுதியில் தினேஷ் தலைமையிலும், ஏர்போர்ட் பகுதியில் ராஜா தலைமையிலும், அரியமங்கலம் பகுதியில் ஜான் பால் தலைமையிலும், திருவரங்கம் பகுதியில் பார்வதி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு