செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஊழல் - காங்கிரஸ் சார்பில் பேரணி
செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இந்த ஊழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்பிரமணியன், புதுவையில் புதிய சட்டசபை கட்ட வேண்டும் என பல்வேறு அரசு பல இடங்களில் அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்ததாகவும், ஆனால் எந்த அரசும் சட்டசபை கட்டிடத்தை கட்டி முடிக்கவில்லை என்றும், தற்போது அமைந்துள்ள புதிய அரசு தட்டாஞ்சாவடியில் சட்டசபை கட்டிடம் கட்டுவதாக அறிவித்துள்ளனதாகவும், ஆனால் இதற்காக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
மேலும் கடந்த காலத்தில கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது என்றும், இதனால் புதிய இடத்தில் தான் கட்டுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது, மேலும் புதுவை அரசு பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை என்றும், எனவே, பாராளுமன்ற நிதி புதுவைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே மாநில அரசின் நிதியை செலவு செய்யாமல் சட்டசபை கட்டிடம் கட்ட வேண்டும். நிதி இல்லைாவிட்டால் தற்போது உள்ள பழைய இடத்திலேயே சட்டசபை தொடர வேண்டும் என தெரிவித்தார். மேலும் செல்போன்கள் கட்டுப்பாடு முழுமையாக வைத்துக்கொண்டு நாட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தன்வசம் வைத்துக்கொள்ளும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்றும், பாஜக அமைச்சர்களின் செல்போனே ஒட்டு கேட்கப்படுவதாகவும், எனவே இந்த ஊழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடிக்கு பொறுப்பு உள்ளதால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினர்.
மேலும் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற நேரடி பார்வையில நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை கண்டன பேரணி நடத்த உள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu