எப்படி இருந்த கட்சி இப்படி ஆயிடிச்சி..! காங்கிரஸை வறுத்தெடுத்த பிரதமர்..!
பிரதமர் மோடி
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீரமானத்தின் போது ஏற்கனவே மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி. காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்ச்சித்தார்.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் காங்கிரஸ் மீது சாரமாரியான தாக்குதலை தொடுத்தார்.
வரும் மக்களவை தேர்தலில் பாஜக உறுதியாக வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட பிரதமர், 'மோடி 3.o' என்று இப்போதே நாட்டுமக்கள் பேச தொடங்கி விட்டதாக குறிப்பிட்டார்.
வளர்ந்த பாரதம் என்பது வெற்றி கோஷமல்ல, அது முழக்கம் என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பி.எம்.கிசான், இலவச காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான பாரத் அனைவருக்கும் சொந்த வீடு வழங்கும் பி.எம். ஆவாஸ் போஜனா, இலவச ரேஷன், குறைந்த விலையில் மருந்துகள் வழங்க மக்கள் மருந்தகம் உள்ளிட்ட திட்டங்கள் தொடரும் என உறுதி அளித்த பிரதமர்,
வரும் காலங்களில் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள் குறைக்கப்படும், குழாய் வாயிலாக சமையல் எரிவாயு வினியோகம் செய்யப்படுத்தப்படும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தரப்படும், சூரிய மின்சக்தி கிடைக்கும் எனபதால் மின் கட்டணம் செலுத்த அவசிமில்லாத நிலை ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும் அதனால்தான் அந்த கட்சியின் பலம் மாநிலங்களவையிலும் குறைந்து வருவதாகவும், காங்கிரஸ், தலித் பிற்படுத்தப் பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான கட்சி என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அம்பேத்கார் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மக்களுக்கு இட ஓதுக்கீடு கிடைத்திருக்காது என்றும் ஓ.பி.சி. மற்றும் பெருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு எதிரானது காங்கிரஸ் என்றும் பேசிய பிரதமர், நேரு பிரதமராக இருந்த போது இடஓதுக்கீட்டில் வேலைவாய்ப்பு அளிப்தால் அரசு நிர்வாகம் பாதிகப்பட்டுவதாக ஜவஹர்லால் நேரு மாநில முதலமைச்சர்களுக்கு கடிம் எழுதியாதாகவும் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கம் காங்கிரஸ் கட்சிக்கு தற்போதும் உள்ளது, என்றும் அதனால்தான், அவர்கள் விட்டுச்சென்ற அடிமைதனம், பிரிவினைவாத கொள்ளைகளை காங்கிரஸ் தொடர்கிறது எனறும் குறிப்பிட்ட அவர், "எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டதே'! என்றும் 'அதற்கு தனது அனுதாபங்கள்' என்றும் கூறினார்.
மேலும் நாட்டை காங்கிரஸ் பிரிக்க நினைப்பதாவும் வரும் மக்களவை தேர்தலில் 40 இடங்களாவது கிடைக்க, பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்தி மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்த போது, அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu