/* */

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரசாரம்: திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரசாரம்: திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்
X

சிறுகனூரில் முதலமைச்சர் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கான மேடை 

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே வாய்ப்பு இருப்பதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதிகளை பங்கீடு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் ஐஎன்டிஐஏ கூட்டணியில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க., புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இதில் ஐஎன்டிஐஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துவிட்டது. தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்குகிறார். இதையொட்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.

இன்று இரவு தஞ்சாவூரில் தனியார் ஓட்டலில் தங்கும் அவர், நாளை (சனிக்கிழமை) தஞ்சை மற்றும் நாகை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Updated On: 22 March 2024 4:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்