நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்குபெற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: தயாநிதிமாறன் எம்பி
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுக்கு உட்பட்ட ஏழுகிணறு பகுதியில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் தயாநிதிமாறன் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதுமுதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தற்போது கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.
எய்ம்ஸ், ஜிப்மர் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லை. நுழைவுத்தேர்வு தனித்தனியாக நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu