நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் கடிதம்
X

முதல்வர் ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளிக்க இருக்கும் தீர்ப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நீடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அடிப்படையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள கொள்கை வேறுபாடுகள் தான். என்ன தான் மதச்சார்பற்ற அரசு என கூறினாலும் மோடி நடத்துவது, நடத்த விரும்புவது இந்துத்வா ஆட்சி. ஸ்டாலின் நடத்துவதாக கூறுவதோ திராவிட மாடல் ஆட்சி.

மோடியுடன் மோதல் ஒருபுறம், அவரது பிரதிநிதியாக தமிழகத்தில் ஆளுநராக வீற்றிருக்கும் ஆர்.என். ரவியுடன் மோதல் இன்னொரு புறம் என தமிழக அரசு நாள்தோறும் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தி.மு.க. அமைச்சர்கள் மீது ஆளுநரின் தூண்டுதலின்பேரில் அமலாக்க துறை நடவடிக்கை எடுப்பதாக குற்றச்சாட்டு வேறு கூறப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்திற்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி போராடுவது போல் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியே தீரவேண்டும் என வரிந்து கட்டுகிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக.

இந்த சூழலில் தான் மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத ஆட்சியாளர்களின் செயல் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வுபோன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!