முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி கைது செய்யப்பட்ட நாளின்று

முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி கைது செய்யப்பட்ட நாளின்று
X
மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது அப்போதைய ஜெ. அரசு. அச்சம்பவம் தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

ஜூன் 30, 2001 – தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நாள். மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்ததாக நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது அப்போதைய ஜெ. அரசு. அச்சம்பவம் தேசிய அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

கருணாநிதி கைது செய்யப்பட்டதன் பின்னணி இது தான்..

1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகப் பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து அவர் கைது செய்யப்பட்டார். 1996ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெயலலிதா 27 நாட்கள் சிறையில் கழித்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தனது கைதுக்குக் கருணாநிதிதான் காரணம் என முழுமையாக நம்பிய ஜெயலலிதா, அதற்குப் பழிவாங்கக் காத்திருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜெயலலிதா, `என்னை 27 நாட்கள் சிறையில் வைத்திருந்த கருணாநிதியைப் பழிவாங்காமல் விட மாட்டேன்' என்று வெளிப்படையாகவே பேசினார்.

2001ம் ஆண்டு மே 14-ம் தேதி முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார். இது சர்ச்சையான நிலையில், அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஜூன் 29-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. ஜெயலலிதா பதவியேற்றதும் சென்னை மாநகர ஆணையராக ஆச்சார்யாலுவும் டிஜிபியாக ரவீந்திரநாத்தும் நியமிக்கப்பட்டனர்.

இந்தப் புகாரானது சென்னை நகரில் 2016 ஆம் ஆண்டு புதியதாக அமைக்கப்பட்ட சிறு மேம்பாலங்களை அமைத்ததில் அரசுக்கு ரூபாய் 12 கோடி மதிப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டது என்பதாகும். காவல் துறையிடம் ஜூன் 29 வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணிக்கு புகார் பெறப்பட்ட நிலையில், கைதானது ஒரு சில மணிநேரங்களில் நள்ளிரவுக்குப் பிறகு நடைபெற்றது. புகார் பெறப்பட்டு குறைந்த விசாரணைக் காலத்திலேயே கைது செய்யப்பட்டது குறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி எழுதுகையில் "சட்டத்தை நிலை நாட்டுவதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது நன்கு தெரிகிறது." என்று குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்திற்காக குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு ஜூலை 1-ம் தேதி செல்வதாக இருந்த ஜெயலலிதாவின் பயணத் திட்டமும் முன்னதாகவே ரத்து செய்யப்பட்டது. அந்த கோயிலுக்கு யானை ஒன்றை அளிப்பதாக இருந்தார் ஜெயலலிதா. எதிரியைப் பழிவாங்கிவிட்டு குருவாயூர் கோயிலுக்கு யானை வழங்கினால் நிம்மதியாக வாழலாம் என ஜோதிடர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு ஆருடம் சொன்னதாக சில பத்திரிகைகள் அப்போது எழுதியது.

Tags

Next Story
how to bring ai in agriculture