டீல் ஓகே..! விரைவில் இந்தியா கூட்டணிக்கு தாவும் நாயுடு?

டீல் ஓகே..! விரைவில் இந்தியா கூட்டணிக்கு தாவும் நாயுடு?
X
பாஜகவின் 243 தொகுதிகளைத் தவிர்த்த மற்ற எல்லா கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.

மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் தனித்தனியே தங்கள் கூட்டணிக்கு வருமாறு இதர கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வரை பாஜக கூட்டணி கிட்டத்தட்ட 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை தொகுதிகள் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த ஜூன் 1ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 4ம் தேதி இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்தி மாநில கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மிகத் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றன.

காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 272 தொகுதிகளை வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று ஒரு கட்சியால் ஆட்சி அமைக்க முடியும். கடந்த இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு இப்படி பெரும்பான்மை கிடைக்காமல் இருக்கவில்லை. ஆனால் இம்முறை தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற வில்லை. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது.

இதனால் பாஜக, ஏற்கனவே நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரோடு பேசி வைத்துள்ளது. ஆட்சிக்கு பெரும்பான்மை தேவைப்படும்போது ஒன்றாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இதனால் அவர்களையும் சேர்த்து கூட்டணியாக 294 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மகராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து அவர்களை நேருக்கு நேர் எதிரே நிற்க வைத்தது பாஜக. அவர்களும் வெற்றி வாய்ப்பில் சில இடங்களில் முன்னிலையில் இருக்கின்றனர். அவர்களையும் இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அடுத்ததாக நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிதிஷ்குமார் அவுட் ஆஃப் ரீச் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் அம்மாநில அரசின் துணை முதல்வருமாகிய டிகே சிவகுமார் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு செய்து பேசியுள்ளார். அவரிடம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 13 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

இப்படியாக பாஜகவின் 243 தொகுதிகளைத் தவிர்த்த மற்ற எல்லா கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.

Tags

Next Story
நைட் தூங்குறதுக்கு முன்னாடி தண்ணீர் குடிக்கிறது நல்லதா,கெட்டதா ?..உடனே தெரிஞ்சுக்கோங்க..!