இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்-பாஜக வழக்கறிஞர் மனு

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்-பாஜக வழக்கறிஞர் மனு
X

 டெல்லி உச்சநீதிமன்றம் 

இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்களிடம் கொடுத்துவிட வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்- பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு அளித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை பராமரிப்பதை அந்த நிர்வாகங்கள் இடமே கொடுத்துவிட வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே அறநிலைத்துறை கோரிக்கையும் வைத்துள்ளார்.. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை போலவே இந்துக்களும் சீக்கியர்களும் வழிபாட்டு தளங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமைகளை வழங்க வேண்டுமெனவும் மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்

கோவில் நிர்வாகத்தினை மாநில அரசுகளே மேற்கொள்வது சட்ட விரோதம் என அறிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!