தமிழ்நாடு, கேரளாவில் பாஜக தலா 3 இடங்களில் வெற்றி:புதிய கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு, கேரளாவில் பாஜக தலா 3 இடங்களில் வெற்றி:புதிய கருத்துக்கணிப்பு
X
தமிழ்நாடு, கேரளாவில் பாஜக தலா 3 இடங்களில் வெற்றி பெறும் புதிய கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா ௩ தொகுதிகளில் பாஜக வெல்லும் என புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன. இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பின்படி, 5 முக்கியமான மாநிலங்களில் பாஜக குறிப்பிட சில இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.

கர்நாடகா: மொத்தம் 28 (பாஜக 22, ஜேடிஎஸ் 2, காங்கிரஸ் 4) - இங்கே பாஜக மீண்டும் 20+ இடங்களை வெல்வது அந்த கட்சிக்கு சாதகமாக மாறும். கேரளா: மொத்தம் 20 (யுடிஎப் 10, எல்டிஎப் 7, பாஜக 3) இதில் காங்கிரஸ் 7, சிபிஎம் 5, பாஜக 3, சிபிஐ 1, கேசி - எம் 1, ஐயுஎம்எல் 2, ஆர்எஸ்பி 1 - கேரளாவில் 3 இடங்களை கைப்பற்றி பாஜக முதல் முறையாக கணக்கு திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர்கள் ராஜீவ் சந்திரசேகர், பத்தனம்திட்டாவில் அனில் ஆண்டனி மற்றும் அட்டிங்கல் தொகுதியில் வி முரளீதரன் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது

மகாராஷ்டிரா: மொத்தம் 48 (பாஜக 27, சிவசேனா-யுபிடி 7, என்சிபி (அஜித்) 2, சிவசேனா-ஷிண்டே 8, என்சிபி-ஷரத் 2, காங்கிரஸ் 1, மற்றவர்கள் 1). அங்கே கட்சிகள் உடைந்துள்ள நிலையில்தான் ஆச்சர்யம் தரும் விதமாக பாஜக 27 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: மொத்தம் 39 (திமுக 18, அதிமுக 4, பாஜக 3, காங்கிரஸ் 8, பாமக 1, மற்றவை 5). தமிழ்நாட்டில் ஏசி சண்முகம் போட்டியிடும் வேலூர், பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி, அண்ணாமலை போட்டியிடும் கோவை பாஜகவிற்கு சாதகமான தொகுதிகளாக இந்த கணிப்பு கூறியுள்ளது.

மேற்கு வங்கம்: மொத்தம் 42 (திரிணாமுல் காங்கிரஸ் 19, பாஜக 22, காங்கிரஸ் 1). இங்கே கடந்த முறை 18 இடங்களை வென்ற பாஜக இந்த முறை 22 இடங்களை வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பாஜக திரிணாமுலை விட அதிக இடங்களில் வெல்லும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 5 மாநில வெற்றி பாஜகவிற்கு தேசிய அளவில் கூடுதல் இடங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தமாக கணிப்பு: மொத்தமாக வெளியாகி உள்ள இந்தியா டிவி கணிப்பில், ஆந்திரப் பிரதேசம்: மொத்தம் 25 (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 10, தெலுங்கு தேசம் 12, பாஜக 3) அருணாச்சல பிரதேசம்: மொத்தம் 2 (பாஜக 2) அசாம்: மொத்தம் 14 (பாஜக 11, ஏஜிபி 1, யுபிபிஎல் 1, AIUDF 1, காங்கிரஸ் 0) பீகார்: மொத்தம் 40 (பாஜக 17, ஜேடியூ 14, ஆர்ஜேடி 1, எல்ஜேபி(R) 5, எச்ஏஎம் 1, ஆர்எல்எம் 1, காங்கிரஸ் 1) சத்தீஸ்கர்: மொத்தம் 11 (பாஜக 10, காங்கிரஸ் 1) கோவா: மொத்தம் 2 (பாஜக 2) குஜராத்: மொத்தம் 26 (பாஜக 26) ஹரியானா: மொத்தம் 10 (பாஜக 10) இமாச்சல பிரதேசம்: மொத்தம் 4 (பாஜக 4) ஜார்கண்ட்: மொத்தம் 14 (பாஜக 12, AJSU 1, ஜேஎம்எம் 1) கர்நாடகா: மொத்தம் 28 (பாஜக 22, ஜேடிஎஸ் 2, காங்கிரஸ் 4) கேரளா: மொத்தம் 20 (யுடிஎப் 10, எல்டிஎப் 7, பாஜக 3) இதில் காங்கிரஸ் 7, சிபிஎம் 5, பாஜக 3, சிபிஐ 1, கேசி - எம் 1, ஐயுஎம்எல் 2, ஆர்எஸ்பி 1 மத்தியப் பிரதேசம்: மொத்தம் 29 (பாஜக 29) மகாராஷ்டிரா: மொத்தம் 48 (பாஜக 27, சிவசேனா-யுபிடி 7, என்சிபி (அஜித்) 2, சிவசேனா-ஷிண்டே 8, என்சிபி-ஷரத் 2, காங்கிரஸ் 1, மற்றவர்கள் 1) மணிப்பூர்: மொத்தம் 2 (பாஜக 1, காங்கிரஸ் 1) மேகாலயா: மொத்தம் 2 (என்பிபி 1, காங்கிரஸ் 1) மிசோரம்: மொத்தம் 1 (இசட்பிஎம் 1) நாகாலாந்து: மொத்தம் 1 (என்டிபிபி 1) ஒடிசா: மொத்தம் 21 (பிஜேடி 11, பிஜேபி 10) பஞ்சாப்: மொத்தம் 13 (ஆம் ஆத்மி 6, காங்கிரஸ் 3, பாஜக 3, எஸ்ஏடி 1) ராஜஸ்தான்: மொத்தம் 25 (பாஜக 25) சிக்கிம்: மொத்தம் 1 (எஸ்கேஎம் 1) தமிழ்நாடு: மொத்தம் 39 (திமுக 18, அதிமுக 4, பாஜக 3, காங்கிரஸ் 8, பாமக 1, மற்றவை 5) தெலுங்கானா: மொத்தம் 17 (காங்கிரஸ் 9, பாஜக 5, பிஆர்எஸ் 2, ஏஐஎம்ஐஎம் 1) திரிபுரா: மொத்தம் 2 (பாஜக 2) உத்தரப் பிரதேசம்: மொத்தம் 80 (பாஜக 73, என்டிஏ கூட்டணிக் கட்சிகளான ஆர்எல்டி 2, அப்னா தளம் (எஸ்) 2, எஸ்பி 3, காங்கிரஸ் 0, பிஎஸ்பி 0) உத்தரகாண்ட்: மொத்தம் 5 (பாஜக 5) மேற்கு வங்கம்: மொத்தம் 42 (திரிணாமுல் காங்கிரஸ் 19, பாஜக 22, காங்கிரஸ் 1) அந்தமான் நிக்கோபார்: மொத்தம் 1 (பாஜக 1) சண்டிகர்: மொத்தம் 1 (பாஜக 1) தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ: மொத்தம் 2 (பாஜக 2) ஜம்மு காஷ்மீர்: மொத்தம் 5 (பாஜக 3, தேசிய மாநாடு 3, காங்கிரஸ் 0, பிடிபி 0) லடாக்: மொத்தம் 1 (பாஜக 1) லட்சத்தீவு: மொத்தம் 1 (காங்கிரஸ் 1) டெல்லி: மொத்தம் 7 (பாஜக 7 ) புதுச்சேரி: மொத்தம் 1 (பாஜக 1) மொத்தம் 543 இடங்கள்: பாஜக என்டிஏ கூட்டணி 399, திரிணாமூல் இல்லாத இந்தியா கூட்டணி 94, திரிணாமூல் காங்கிரஸ் உட்பட மற்றவை 50 இடங்கள் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!