/* */

கரூர் மக்களவை தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த பா.ஜ.க. மேலிடம் முடிவு?

கரூர் மக்களவை தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கரூர் மக்களவை தொகுதியில் அண்ணாமலையை நிறுத்த பா.ஜ.க. மேலிடம் முடிவு?
X

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

லோக்சபா தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிமுகவும் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் பலரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினர். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதால் பாஜக தலைவர்கள், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.

நீலகிரி லோக்சபா தொகுதியை குறிவைத்து ஓராண்டுக்கும் மேலாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். திமுக மூத்த தலைவர் ஆ.ராசாவுக்கு எதிராக நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்றே அக்கட்சியினர் திட்டவட்டமாக கூறி வந்தனர். ஆனால் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில் எல்.முருகன் திடீரென 2-வது முறையாக ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். போட்டியிட மறுத்த அண்ணாமலை: மத்திய அமைச்சர் எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தாம் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். அதாவது கோவை லோக்சபா தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அண்ணாமலை, எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் இந்த முடிவை டெல்லி பாஜக மேலிடம் ஏற்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டாக வேண்டும் எனவும் டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். கரூர் அல்லது கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலையை டெல்லி மேலிடமே வலுக்கட்டாயமாக வேட்பாளராக களமிறக்கப் போகிறது என்கின்றன அந்த ஊடகச் செய்திகள்.

டெல்லியில் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில்தான் அண்ணாமலையை போட்டியிட வைக்க வேண்டும் என டெல்லி மேலிடம் முடிவு எடுத்ததாகவும் அந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் அண்ணாமலை பெயரும் இடம் பெறும் எனவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார் அண்ணாமலை. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இரா.இளங்கோ (மொஞ்சனூர் இளங்கோ), 93,369 வாக்குகளைப் பெற்றார். அவரது வாக்கு சதவீதம் 52.72. 2-வது இடத்தைப் பெற்ற அண்ணாமலைக்கு கிடைத்த வாக்குகள் 68,553. அரவக்குறிச்சி தொகுதியில் 38.71% வாக்குகளை அண்ணாமலை பெற்று தோல்வியைத் தழுவி இருந்தார். 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Updated On: 1 March 2024 5:20 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...