அதிமுகவில் ஐக்கியமான பாஜக மாநில நிர்வாகி தடா பெரியசாமி
அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி
பாஜக பட்டியல் சமூக அணியில் ஒரு முக்கிய முகமாக பார்க்கப்படும் தடா பெரியசாமி திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி கூறுகையில், சிதம்பரம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளராகவும், பட்டியல் சமூக அணியின் மாநில தலைவராக இருக்கும் என்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்து வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து நான் தீவிரமாக களமாடி வரும் நிலையில் என்னை வேட்பாளராக அறிவிக்காமல் அல்லது தொகுதியை சேர்ந்த வேறொரு நபரை அறிவிக்காமல் எங்கிருந்தோ ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். எனக்கான முக்கியத்துவம் இல்லாத கட்சியில் தொடர விரும்பவில்லை அதனால் அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுக தலைமை கூறினால் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தடா பெரியசாமி முன்வைத்துள்ளார். பாஜகவில் பட்டியல் சமூகத்தை சார்ந்த தான் மட்டுமே பிரதிநிதித்துவம் பெரும் வகையில் எல்.முருகன் செயல்பட்டு வருவதாகவும், மற்றவர்களை முன்னேற விடாமல் தடுப்பதாகவும் தடா பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாஜக பட்டியல் சமூக அணியில் ஒரு முக்கிய முகமாக பார்க்கப்படும் தடா பெரியசாமி திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது சிதம்பரம் தொகுதியில் பாஜகவின் வெற்றிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu