பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகை.
நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நாளை ஒருநாள் பயணமாக சென்னை வரவுள்ளார். அவருடைய முழுமயான பயண திட்டங்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து நாளை காலை சரியாக 9.20 மணியளவில் புறப்படும் ஜெ.பி.நட்டா, சென்னை விமான நிலையத்திற்கு மதியம் 12.45 மணியளவில் வரவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்தியமைச்சர் எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர். அங்கிருந்து நேரடியாக தனியார் ஹோட்டலுக்கு செல்லகூடிய நட்டா மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் சுமார் 13 முக்கிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களும் ஜெ.பி.நட்டாவை சந்திக்கின்றனர். இதனை தொடர்ந்து காட்டன்குளத்தூரில் உள்ள பிரபல கல்லூரி வளாகத்தில் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், பூத் கமிட்டியை வழுப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெறவுள்ளது.

Tags

Next Story