பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டி

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டி
X
பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது: அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினெட்டாவது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. மொத்தம் ஏழு கட்டமாக இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதில் முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழக முழுவதும் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பில் சுணக்கம் காரணமாக முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 28ஆம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 30 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய ஆளும் கட்சியும், தமிழகத்தில் மூன்றாவது அணியாகவும் உள்ள பாரதிய ஜனதாவும் முதலாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

அதில் மத்திய சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய சென்னையில் இளைஞர் தலைவர் வினோஜ் பி செல்வம், வேலூர் தொகுதியில் டாக்டர் ஏசி சண்முகம், கிருஷ்ணகிரி தொகுதியில் சி நரசிம்மன், நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல் முருகன் கோயமுத்தூர் தொகுதியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழக பாரதிய ஜனதாவிற்கு புத்துயிர் ஊட்டியிருப்பவர் கே. அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் கோவையில் போட்டியிடுவது தமிழக முழுவதும் உள்ள பா.ஜ.க.வினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலையின் வேகம் செயல்பாடுகள் தி.மு.க. அதிமுக ஆகிய கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!