கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க.

கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க.
X

கர்நாடக மாநில சட்டமன்ற கட்டிடம் விதான் சவுதா (கோப்பு படம்).

BJP is trying to retain power in the state of Karnataka.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் அங்கு வருகிறமே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

கர்நாடகா மாநிலத்தை பொறுத்தரை ஜனதா தளம், காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளன. தற்போது அங்கு நடைபெற்று வரும் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 140 வேட்பாளர்களுடனான முதல் பட்டியலை பா.ஜ.க. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

கர்நாடகா தேர்தலில் போட்டியிடும் ஜேடிஎஸ், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 166 வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பா.ஜ.க. தரப்பில் ஒரு வேட்பாளர்கள் பட்டியல் கூட இதுவரை வெளியாகவில்லை. ஆனால் ஏற்கனவே போலி வேட்பாளர் பட்டியல் ஒன்று வெளியாகி பா.ஜ..கவினரை அதிர்ச்சி அடையவைத்தது. டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தலைமையிலான குழு, கர்நாடகா பா.ஜ.க .வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகிறது

இந்தப் பட்டியலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு இன்று ஒப்புதல் வழங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு அல்லது நாளை காலை பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

கர்நாடகா பா.ஜ.க.வில் தலைவர்களின் வாரிசுகள் பலரும் சீட் கேட்டு முட்டி மோதுகின்றனர். ஆனால் கட்சி மேலிடமோ வாரிசுகளை ஊக்கப்படுத்துவதா? என்பதில் குழப்பத்தில் இருக்கிறது. அப்படி வாரிசுகளுக்க் சீட் தராமல் போனால் தலைவர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கருத்து கணிப்புகளும் கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி வருகின்றன. இன்னொரு பக்கம் தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் இருப்பதாகவும் கூறுகின்றன. இவற்றின் பின்னணியில் கர்நாடகா பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இதன் காரணமாக தனது தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைத்து விட்டால் அது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமையும் என அவர் எதிபார்ப்பதால் அவரது உழைப்பும் காங்கிரஸ்கட்சிக்கு புதிய உத்வேத்தை அளித்து உள்ளது.

Tags

Next Story