பா.ஜனதா நிர்வாகிகள் இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும்-அண்ணாமலை வேண்டுகோள்
சில மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வரும் மோதல்களை தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு அமைப்பை தடை செய்ய உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் நடந்து வருகிறது.
அவ்வாறு தடை செய்யும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பா.ஜனதா நிர்வாகிகளுக்கும், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக இரவில் தனிமையான பயணத்தை தவிர்க்க வேண்டும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கட்சி வேறு, அரசு வேறு, அரசு எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu