முதல்வர் ஸ்டாலினின் உடை ரூ.17 கோடி என கூறிய பாஜக நிர்வாகி கைது
துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை 17 கோடி என அமைச்சர் பி.டி.ஆர். தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகி கைது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப்பயணமாக கடந்த 24-ம் தேதி துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவரது பயணம் குறித்து சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.இதே போன்று வேறொரு அவதூறு வழக்கில் நெல்லையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி ஒன்றிய பாஜக செயலாளர் அருள் பிரசாத்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துபாய் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிந்திருந்த உடை ரூ.17 கோடி என அமைச்சர் பி.டி.ஆர். தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள் பிரசாத் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம் - வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை என பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu