சிதம்பரம் கோவில் விவகாரம்: அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிலை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு சென்றனர். அவர்களின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மே 23-ஆம் தேதி, சிதம்பரம் நடராஜரை அவதூறாகப் பேசிய நபரை திமுக அரசு கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து சிவனடியார்கள் போராடினார்கள்.
கயவனை தண்டிக்காமல், போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டுள்ளது இந்து சமய அறநிலையத் துறை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை?
தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மனவருத்தத்துக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் திமுக அரசு செய்யும் காரியங்களைக் கண்டு, தமிழக பாஜக அமைதியாக இருக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu