/* */

முடிஞ்சா கைது செய்யுங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால்

பாஜக அலுவலகத்தில்தான் இருக்கிறேன்; முடிந்தால் கைது செய்து பாருங்கள் என்று, திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

முடிஞ்சா கைது செய்யுங்க:  திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால்
X

இது தொடர்பாக, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அளித்த பேட்டியில், திமுக நஷ்ட ஈடு கேட்ட விவகாரத்தில் தெம்பு, திராணி இருந்தால் தக்க ஆதாரத்தை கொடுத்து , என்னை கைது செய்து பார்க்கட்டும் என்று கூறினார்.

அடுத்த 6 மணி நேரம், இதே பாஜக அலுவலகத்தில்தான் நான் இருப்பேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று கூறிய அண்ணாமலை, நீங்கள் என்னை கைது செய்யாவிட்டால், மக்களிடம் மாட்டிக் கொள்வீர்கள் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எனக்கு ஊரில் ஆடு, மாடுகள் தான் உள்ளன. என்னிடம் ரூ 610 கோடி இல்லை. தொட்டம்பட்டியிலிருந்து வந்த என்னை முடிந்தால் தொட்டு பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

Updated On: 29 March 2022 12:57 PM GMT

Related News