பாஜக கூட்டணி தொடரும்: அமித் ஷாவை சந்தித்த பிறகு இபிஎஸ்

பாஜக கூட்டணி தொடரும்: அமித் ஷாவை சந்தித்த பிறகு இபிஎஸ்
X

எடப்பாடி பழனிச்சாமி.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்தனர்

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, இபிஎஸ் மற்றும் அவருடன் சென்றவர்கள் சந்தித்தனர். அமித்ஷாவின் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நடந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் கூறியதாவது;

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து அதிர்ச்சியடைந்தேன். நிதியமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றோம். ஆடியோ விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். அந்தந்த கட்சிகள் அவ்வர்களின் கொள்கையின் அடிப்படையில் செயல்படும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்தது அதிமுக அரசு என்று கூறினார்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் குழப்பங்களைத் தவிர்க்க முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்ய அதிமுகவிடம் பாஜக கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai future of performance marketing