மாநிலத்திலும் மத்தியிலும் அபார வெற்றி: சந்திரபாபு நாயுடு அசத்தல்

மாநிலத்திலும் மத்தியிலும் அபார வெற்றி: சந்திரபாபு நாயுடு அசத்தல்

சந்திரபாபு நாயுடு.

மாநிலத்திலும் மத்தியிலும் அபார வெற்றி பெற்று இருப்பதன் மூலம் சந்திரபாபு நாயுடு அனைத்து தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலத்திலும், மத்தியிலும் அபார வெற்றி பெற்று இருப்பதன் மூலம் சந்திரபாபு நாயுடு இந்திய தலைவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. அங்குள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 175 .மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 25 .ஏற்கனவே ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனார்.

இந்த தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏராளமான சறுக்கல்கள் ஏற்பட்டன. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தது போன்ற செயல்களும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அமைந்தன. இந்நிலையில் மத்தியிலும் மாநிலத்திலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. இது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது.

இந்தியா முழுவதும் பதிவான நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து ஆந்திர மாநில சட்டமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது. இதில் 88 தொகுதிகள் வெற்றி பெற்றாலே தனி பெரும்பான்மை என்கிற நிலையை கடந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 150 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.

இதன் காரணமாக அவர் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. வருகிற ஜூன் 9ஆம் தேதி அவர் ஆந்திர முதலமைச்சராக மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. அதே நேரத்தில் அம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தெலுங்கு தேசம் 22 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த வகையில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் 22 தொகுதிகள் இருப்பதால் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டால் சந்திரபாபு நாயுடு அவருக்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து சொல்லி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் உள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக கருதப்படுகிறது.

அந்த வகையில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சரானதுடன் மத்தியில் மோடி தலைமையில் அமைய உள்ள பாரதிய ஜனதா ஆட்சியிலும் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளார் என்பது மட்டுமல்ல, இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டால் இவரது ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் அதற்கும் தயாராக இருப்பதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்திய தலைவர்கள் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் அசத்தல் வெற்றியை பெற்று உள்ளார் சந்திரபாபு நாயுடு.

Tags

Read MoreRead Less
Next Story