ஆன்லைன் ரம்மிக்கு தடை: நாடாளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மிக்கு தடை: நாடாளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. நோட்டீஸ்
X
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி தி.மு.க. நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க கோரி நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தொடர்பாக தி.மு.க. நோட்டீசு அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் தற்கொலை செய்து தங்களது இன்னுயிரை இழந்தனர். அதற்கு அடுத்த படியாக தற்போது ஆன்லைன் ரம்மி எனும் ஒரு வகையான சூதாட்ட விளையாட்டு இளைஞர்களின் உயிரை குடித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில்பணத்தை இழந்த 45 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடைவிதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை சட்டமாக்குவதற்காக தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிந்துரைக்காகாக அனுப்பி வைத்தது. ஆளுநர் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தால் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் அந்த மசோதா சட்டமாக்கப்படும்.

ஆனால் இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக சட்டமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அது மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்றும் கூறி உள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக்கோரி தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி தடை குறித்து விவாதிக்க தி.மு.க. நாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, நாளை நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து தி.மு.க.எம்.பி.க்கள் விவாதம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!