அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்: மோடி பரபரப்பு பேச்சு

அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள்: மோடி பரபரப்பு பேச்சு

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி.

சமாஜ்வாடி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பார்கள் என்று பிரதமர் மோடி பரபரப்பாக பேசினார்.

காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தங்கத்தை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும்; 2 எருமைகள் வைத்திருந்தால் ஒரு எருமையை முஸ்லிம்களுக்கு பிரித்து கொடுக்கும்; உங்கள் சொத்துகளை ஆய்வு செய்து அதிக குழந்தை பெறுகிறவர்களுக்கு கொடுத்துவிடும் காங்கிரஸ் என வெளிப்படையாகவே மதம் சார்ந்து விமர்ச்சித்து வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் இத்தகைய மத அடிப்படையிலான பிரசாரத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அதே போல நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன. சில நீதிமன்றங்களில் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அயோத்தி ராமர் மீண்டும் கூடாரத்துக்குள் போய்விடுவார். அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கே பயன்படுத்த வேண்டும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் பாடம் கற்க வேண்டும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதே போல சில நாட்களுக்கு முன்னர் டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, அயோத்தி ராமர் கோவிலை இந்த மோடி கட்டவில்லை. மோடி கோவில் கட்டியதாக தவறாக சொல்கின்றனர். 500 ஆண்டுகளாக மக்கள் இதற்காக காத்திருந்தனர். இதற்காக எண்ணற்ற உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்தான் பெருமிதம் தரக் கூடியது. ராமர் கோவிலை தேர்தல் பிரச்சனையாக பார்க்கக் கூடாது. ராமர் கோவில் விவகாரத்தை தேர்தல் பிரச்சனையாக ஒரு போதும் முன்வைக்க மாட்டோம். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அனைவரையும் அழைத்தோம். அன்று எங்கள் அழைப்பை நிராகரித்தவர்கள் இப்போது பேசுகிறார்கள் என கூறியிருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story