ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஜெய்ராம் ரமேஷ் கார் மீது தாக்குதல்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஜெய்ராம் ரமேஷ் கார் மீது தாக்குதல்

அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நியாய யாத்ராவில் வந்த ஜெய்ராம் ரமேஷ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ஜெய்ராம் ரமேஷ் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி தமிழகத்தின் கன்னியகுமரியில் துவங்கி, பல மாவட்டங்கள் கேரளா மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீர் வரை சென்றார். இந்த யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது கட்டமாக மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தனது பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி உள்ளார். இதற்கு நியாய யாத்ரா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த யாத்திரை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என நினைக்கிறார். இதன் காரணமாக மத்தியில் உள்ள பாரதீய ஜனதா ஆட்சியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் தொடங்கி நாகாலாந்து வழியாக தற்போது அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, ராகுல் காந்தி யாத்திரைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

அஸ்ஸாமில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கார் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

ராகுல் காந்தி யாத்திரைக்கு அஸ்ஸாம் பாஜக அரசு நெருக்கடி தருவதை ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்க சென்ற ஜெய்ரா ரமேஷ் காரை பா.ஜ.க.வினர் சூழ்ந்து கொண்டு தாக்கி இருக்கின்றனர். பாரத் ஜோடோ நியாய யாத்திரை ஸ்டிக்கர்களையும் அவரது காரில் இருந்து கிழித்து எறிந்து உள்ளனர் பாஜகவினர். அத்துடன் ஜெய்ராம் ரமேஷுக்கு எதிராகவும் ராகுல் காந்தி யாத்திரைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியும் தண்ணீரை இறைத்தும் பாஜகவினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

அஸ்ஸாம் மாநிலம் சோனிட்பூரில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோக்களையும் ஜெய்ராம் ரமேஷ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story