சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநர் மறுப்பு

சட்டப்பேரவையில் உரையாற்ற ஆளுநர் மறுப்பு
X
தேசிய கீதம் இசைக்கும் முன்பாக அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்.


தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் ஆளுநர். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இந்நிலையில் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறி அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து வெளியேறினார்.

Tags

Next Story
ai in future agriculture