வெட்கமாக இல்லையா? தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி அண்ணாமலை விமர்சனம்

வெட்கமாக இல்லையா? தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி அண்ணாமலை விமர்சனம்
X
வெட்கமாக இல்லையா? என கேட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

திமுக கடந்த 2021 -ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்துள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக இன்று வெளியிட்டது. இந்த தேர்தல் அறிக்கையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும் டீசல் விலையை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான், 2021 - சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் அதே வாக்குறுதியை கொடுத்துள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக. மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் 3 -வது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

lai-slams-592311.html

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!