16ம் தேதி டெல்லி செல்கிறார் அண்ணாமலை.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார்.

HIGHLIGHTS

16ம் தேதி டெல்லி செல்கிறார் அண்ணாமலை.
X

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார்.பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காதநிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வருகிற 16ம் தேதி அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. நடத்தும் ஆலோசனை கூட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்கிறார். வருகிற 17 மற்றும் 18ந் தேதிகளில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது என்பது குறிப்பித்தக்கது.

Updated On: 13 Feb 2024 5:41 AM GMT

Related News