அமைச்சர்கள் ஊழல் குறித்து 15 நாளில் புத்தகம் ரிலீஸ்: அண்ணாமலை அதிரடி
இது தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசிய பேச்சு, கட்சி தொண்டர்களிடம் பேசியது போன்று இருந்தது. முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் சரியில்லை.
ஆனால், பிரதமரின் பேச்சு எப்படி இருந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். தமிழ் கலாச்சாரத்தை தனது தோளில் தூக்கி, இந்த மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது, இந்த மண்ணை எப்படி நேசிக்கிறேன் என்று பிரதமர் பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையிலுமே தெரிந்தது.
தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிரதமர் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டு இருக்கிறார். நீட் பொம்மையை வைத்து நாடகமாடுகின்றனர். பிரதமர் உங்களைப்போல நிறைய பேரை பார்த்துவிட்டு வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டியில் இருந்து கோபாலபுரம் வரையிலானது.
மோடியின் அரசியல் என்பது இந்திய அரசியலை தாண்டி உலக அரசியலுக்கு சென்றுவிட்டார். எனவே, பிரதமரிடம் சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் பேசுங்கள். அவ்வாறு பேசினால், நீங்கள் கேட்காமல் தமிழகத்திற்கு வரவேண்டிய வேலைகளை பாஜக செய்யும்.
திராவிட மாடல் வளர்ச்சி என்று நீங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு துறை வாரியாக புத்தகம் வெளியிடப் போகிறோம், ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு அமைச்சராக இன்னும் 15 நாட்களில் ஊழல் பட்டியல் வரும். இது பற்றிய புத்தகத்தை வெளியிடுவோம். இதன் மூலம் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியே ஆகவேண்டும். இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu