அதிமுக அணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்துப்போட்டி: அண்ணாமலை

அதிமுக அணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்துப்போட்டி: அண்ணாமலை
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்துப்போட்டியிடுவதாக, அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து பாஜக வெளியேறி தனித்துப்போட்டியிடுவதாக, அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து, சென்னை கமலாலயத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:
வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக போட்டியிடுகிறது. இது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தான். கூட்டணி முறிவுக்கு நயினார் நாகேந்திரன் பேச்சு காரணமல்ல.


தேசிய அளவில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும். அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் மீது பாஜகவுக்கு துளியும் வருத்தம் இல்லை. கடினமான சூழலில் அதிமுகவை அவர்கள் வழி நடத்தி வருகின்றனர். நான் நேசிக்கும் தலைவர்களில் அவர்கள்.


அதேநேரம், பாஜகவும் தன்னை வளத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளித்து, தனித்து போட்டியிட வேண்டிய நிலையை, நாங்கள் எடுத்துள்ளோம். சற்று நேரத்தில் பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

முன்பே சொன்ன இன்ஸ்டா நியூஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலக பாஜக முடிவு செய்த தகவல் அதிகாரபூர்வமாக இன்று பிற்பகல்தான் வெளியாகின. அதற்கு முன்பாக, முன்னணி செய்தி சேனல்களிலும் பாஜக வெளியேற்றம் குறித்து, இன்று முற்பகல் வாக்கில்தான் செய்திகள் கசியத் தொடங்கின.

அதே நேரம், நமது இன்ஸ்டா நியூஸ் இணையதளம், பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலையிலேயே, அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு என்று செய்தியை வெளியிட்டது குறிப்பிடத்தகக்து.

Tags

Next Story