கமல்ஹாசன் பிறந்தநாள்: ம.நீ.ம. சார்பில் ஒருவார அன்னதான திட்டம் தொடக்கம்

கமல்ஹாசன் பிறந்தநாள்: ம.நீ.ம. சார்பில் ஒருவார அன்னதான திட்டம் தொடக்கம்
X

கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று முதல் 7 நாட்களுக்கு `ஐயமிட்டு உண்' என்ற பெயரில், அன்னதானத் திட்டத்தை, அக்கட்சி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாள், வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நவம்பர் 1 (இன்று) முதல் நவ. 7 வரை, நாளொன்றுக்கு, ஒரு லட்சம் பேர் என, மொத்தம் 7 லட்சம் பேருக்கு, அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டமான `ஐயமிட்டு உண்' என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தை, கமல்ஹாசன் கொடியசைத்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்த அன்னதானத் திட்டம், இன்று முதல், தமிழகம் முழுவதும் ஏழு நாட்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இ தற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்