'ஜெய்பீம்' சர்ச்சை: சூர்யாவுக்கு எதிராக வரிந்து கட்டும் அன்புமணி

ஜெய்பீம் சர்ச்சை: சூர்யாவுக்கு எதிராக வரிந்து கட்டும் அன்புமணி
X
ஜெய்பீம் சினிமா பட விவகாரத்தில், நடிகர் சூர்யாவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை அன்புமணி எழுப்பியுள்ளார். சூர்யாவின் அமைதி ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நடிகர் சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்:

உங்களின் (சூர்யா) தயாரிப்பில், நீங்கள் நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம், வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்குத் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர்.


ஆனால், தங்களிடம் இருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது. 'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல் துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை.

அந்தப் பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை என்று கூறியுள்ளார்.


அத்துடன், அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், நடிகர் சூரியாவுக்கு அன்புமணி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அந்த அவினாக்களுக்கு விடையளிப்பீர்கள் என நம்புகிறேன். ஜெய்பீம் திரைப்படத்தின் வில்லன்கள் செய்த பாவத்தை விட, அந்தப் படக்குழுவினர் செய்துள்ள பாவம் மிகவும் கொடியது. இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு ஒரு வாரமாக நீங்கள் கடைபிடித்து வரும் அமைதி ஆபத்தானது. நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காடுவெட்டி குருவின் மருமகன் காடுவெட்டி மனோஜ், ஜெய்பீம் திரைப்படத்திற்கும், அப்படக் குழுவினருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இதே போக்கில் சென்றால், சூர்யா தமிழகத்தில் எந்த இடத்திலும், அவர் நடமாட முடியாது. அவர் 3 கோடி வன்னிய மக்களிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

Tags

Next Story