அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்தது குக்கர் சின்னம்
![அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்தது குக்கர் சின்னம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்தது குக்கர் சின்னம்](https://www.nativenews.in/h-upload/2024/03/20/1880372-gutga.webp)
லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தரமாக சின்னம் வழங்கப்பட்டுள்ளது. மாறாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் என்பது கிடையாது.
இதனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின்போது தங்களுக்கான சின்னத்தை பெற முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும். அதனை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் வழங்கும்.
அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்தது. குக்கர் சின்னத்தில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன்பிறகு அவரது கட்சி சந்திக்கும் தேர்தலில் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கி பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் வரும் லோக்சபா தேர்தலிலும் அவர் குக்கர் சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி பாஜக கூட்டணியில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் அமமுகவுக்கு மொத்தம் 2 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - டிடிவி தினகரன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
இருப்பினும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதில் பாஜக-அமமுக அமைதி காத்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொகுதிகளை விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அப்போது தான் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்க முடியும். இதனை பாஜக மேலிடமும் புரிந்து வைத்துள்ளது.
இதனால் நாளைய தினம் அமமுக போட்டியிடும் 2 தொகுதிகளின் பெயர்களையும் பாஜக வெளியிடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. டிடிவி தினகரனை பொறுத்தமட்டில் தேனியில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேனி உள்பட 2 தொகுதிகள் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu