அதிமுக ட்விட்- போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம்
போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை வைத்திருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்
பட்டியலின அரசுஅதிகாரியை சாதியின் பெயரால் இழிவாக பேசி,மிரட்டி,மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவபூமியாம் தமிழகத்தில் அமைச்சர் ஒருவரே சாதிய வன்மத்தோடு நடப்பதுதான் உங்கள் சமூகநீதியா? - என்று அதிமுக ட்விட் போட்ட ஒரு மணி நேரத்தில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது
ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் பொது போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் விரைவு பேருந்து சேவைகளை மிகவும் சிக்கனமான மற்றும் திறமையான முறையில் நமது மாநிலத்தில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிற்றூர் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளும் போக்குவரத்து சேவை மூலம் இணைக்கப்படுகின்றன.
எஸ். எஸ். சிவசங்கர் இவர் 2006 தேர்தலில் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2011, 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில், சட்டமன்ற உறுப்பினராக, குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்) அமைச்சராக பதவியேற்றார்.
இவரின் சொந்த ஊர் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1990 ஆம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இவரது முகநூல எழுத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு "மக்களோடு நான்" என்ற பெயரில் கிழக்கு பதிப்பத்தால் நூலாக வெளிவந்தது. அந்திமழை என்ற இதழில் விருந்தினர் பக்கத்தில் இடம்பெற்ற இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இவரின் இரண்டாவது நூலாக "சோழன் ராஜா ப்ராப்தி" என்ற பெயரில் வெளியானது. அமேசான் கிண்டில் பென் டூ பப்ளிஷ் என்ற தலைப்பில் 2019 ஆம் ஆண்டு நடத்திய போட்டியில் இவரால் எழுதப்பட்ட "தோழர் சோழன்" என்ற நூல் இறுதிப் போட்டியில் உள்ளது.
தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் துறை மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை வைத்திருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu