விசிக வின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அதிமுக: அதிர்ச்சியில் திமுக
தொல். திருமாவளவன் -எடப்பாடி பழனிசாமி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுகவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான அழைப்பிதலும் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த மாநாட்டில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அல்லது அதிமுக வின் முன்னணி கட்சி நிர்வாகிகளில் யாராவது ஒருவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என பரவலாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் திமுக தலைவரும் அதன் முன்னணி பிரமுகர்களும் காட்டிய நெருக்கம் தான் திமுக கூட்டணி கட்சிகள் இடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதாவுடன் மென்மையான போக்கை திமுக கடைபிடித்து வருவதாலும் திமுக தலைவர் பற்றி பாஜக தலைவர்கள் வானளாவ புகழ்ந்து பேசுவதும் எதிர்காலத்தில் அவர்கள் இருவருக்கும் கூட்டணி ஏற்பட்டு விடுமோ என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன .
இந்த கலக்கத்தின் வெளிப்பாடாகவே தற்போது நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள் அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் கூட்டணி காட்சிகள் மாறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .அதிமுகவை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகளை கலைக்க வேண்டும் என்பதே முதல் இலக்காக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திமுக தலைமை ஒருவித கலக்கத்தில் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu