நண்பகல் 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா யார்?
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. அடுத்தபடியாக அதிமுக அதிக இடங்களில் பிடித்தது. இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக அதிமுக எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வருகிற 21ம் தேதி இந்த ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொறடா தேர்வு செய்யப்பட உள்ளது.
ராயபுரம் கட்சி தலைமை நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. கொறடா பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்க, கே.பி.முனுசாமி ஆகியோர் பெயர்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே இன்று நடக்கும் கூட்டத்திற்கு பிறகு உண்மை நிலை தெரிந்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu