அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனுவின் மீது இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனுவின் மீது இன்று விசாரணை
X
அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு 4 வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்குகடந்த 30 ம் தேதி வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணையை இன்று ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil