70 ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்ற தேர்தலில் மையம் கொண்டுள்ள கச்சத்தீவு புயல்
வரைபடத்தில் கட்சத்தீவு.
இந்தியா முழுவதும் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட நாளன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி பரிசீலனை எல்லாம் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும்,அதிமுக தேமுதிக தனியாக கூட்டணியாகவும், பாஜக மற்றும் பாமக ஒரு கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் என மொத்தம் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவி வருகிறது.
தமிழகத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி பாஜக களத்திலே இல்லை என்று அதிமுக சார்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. திமுகவோ மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை அகற்றிவிட்டு நாம் கைகாட்டும் நபரே பிரதமராக வரப் போகிறார் அதற்காக 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இப்படி தமிழகத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் மாறி மாறி பாரதிய ஜனதாவை குறை சொல்லி வருகிறார்கள்.
பதிலுக்கு பாரதிய ஜனதா கட்சியும் திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது.கொலை கொள்ளை கற்பழிப்பு அதிகரித்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதை மருந்து நடமாட்டம் சர்வ சாதாரணமாக உள்ளது என குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் திடீரென தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கச்சத் தீவு தொடர்பாக ஒரு தகவலை பெற்று அதை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தினார்.
அதாவது எச்சத்தீவனது 1974 ஆம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் கருணாநிதி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இன்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு முழு முழு காரணம் திமுக தான் என்று பிரச்சாரம் செய்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் களத்தில் ஆதரவு கருத்தினை அதாவது கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பதிவிட்டு இருந்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் திமுக ஆட்சியில் தான் கட்ச தீவு தாரை வார்க்கப்பட்டு இருக்கிறது. அதனை திமுகவினர் மறைத்து விட்டார்கள். கருணாநிதி அன்று அதை தடுத்து இருந்தால் ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டு இருக்காது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த கச்சத்தீவு விவகாரம் 70 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது தமிழக அரசியலில் பெரும் புயலாக மையம் கொண்டு இருக்கிறது. கச்சத்தீவை எப்படியும் மீட்டே தீருவோம் என்று பாரதிய ஜனதா பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் அதற்கான வாக்குறுதி இன்னும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுசம்பவம் இப்போது மீண்டும் பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் இந்த பிரச்சாரம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. கச்ச தீவு பிரச்சினைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினரும் காங்கிரஸாரும் எல்லை பகுதியில் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா அபகரித்துவிட்டது.அதை மறைப்பதற்காக பாஜக இப்படி ஒரு யுக்தியை கையாண்டுள்ளது என குற்றம் சாட்டி வருகிறார்கள்.
எது எப்படியோ இலங்கை ராணுவம் மற்றும் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் அவர்களது படகுகள் கொள்ளையடிக்கப்படுவதும் அன்றாட பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்றால் கச்சத்தீவு இந்தியாவிற்கு மீண்டும் வரவேண்டும். கச்சத்தீவில் இந்தியாகடற்படை தளம் அமைத்தால்தான் சீனாவின் ஊடுருவலை தடுக்க முடியும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. எனவே இந்த பிரச்சனை நிச்சயம் தமிழக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu