அதிமுக ஆர்ப்பாட்டம் டிச. 17ம் தேதிக்கு மாற்றம்

அதிமுக ஆர்ப்பாட்டம் டிச. 17ம் தேதிக்கு மாற்றம்
X
தமிழக அரசை கண்டித்து, வரும் 11ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம், டிச. 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவை ஒட்டி, டிசம்பர் 11ல் நடக்கவிருந்த போராட்டம், டிசம்பர் 17க்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக, இப்போராட்டம் டிசம்பர் 9ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 11ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைக்க வேண்டும், மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரமும், மறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 12 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், அம்மா மினி கிளினிக்கை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!