அதிமுகவில் இருந்து ஜெ.எம்.பஷீர் நீக்கம்: ஈபிஎஸ் அதிரடியின் பின்னணி

அதிமுகவில் இருந்து ஜெ.எம்.பஷீர்  நீக்கம்: ஈபிஎஸ் அதிரடியின் பின்னணி
X

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்.

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் , அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளதால், தென் சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர், கட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெ.எம்.பஷீர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகம் இழைத்துள்ளார். அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!