அதிமுக உள்கட்சித் தேர்தல்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, கடந்த 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 3, 4 ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பிற்பகல் 3 மணி வரை, இதில் 154 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவை பெரும்பாலும், ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் ஆகியோருக்கு ஆதரவாக, இருந்ததாக கூறப்பட்டது. இருவரின் வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும், வேட்புமனு பரிசீலனையின்போது, கட்சி விதிகளுக்கு உட்பட்டு நிராகரிக்கப்பட்டன.
இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், முறையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இதுபற்றிய அறிவிப்பை, அக்கட்சியின் தேர்தல் ஆணையர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கட்சிப் பதவிகளுக்கு தேர்வான ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவருமே, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் மரியதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu