/* */

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்?

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி கொறடா மற்றும் துணைத் தலைவர் யார்?
X

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிமுக சட்டமன்ற கொறடா மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏக்கள் தவிர, கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On: 14 Jun 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பள்ளிகளில் காலை உணவு வகைகளை தரமாக வழங்க வேண்டும்: முதன்மை செயலர்...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 3 நாட்களில் 60 பைசா குறைந்தது :...
  3. அரசியல்
    பிரதமர் மோடி தான் பிறவி எடுத்ததன் நோக்கம் பற்றி என்ன சொன்னார்?
  4. திருவண்ணாமலை
    தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஹோட்டலில் சாப்பிட போறீங்களா..? கொஞ்சம் கவனம் வைங்க..!
  6. திருவண்ணாமலை
    தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம்..!
  7. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளியை தூக்கி சென்ற விவகாரம்: இணை...
  8. ஆரணி
    ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா..!
  9. வீடியோ
    தேர்தலில் VK Pandian நிற்கட்டும் நாங்கள் தடுக்கவில்லை Annamalai...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் 1008 கலசபிஷேகம்..!