தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
X
ஆளுனர் உரையை புறக்கணித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள உள்ள நிலையில், ஆளுநரின் உரையை புறக்கணித்து, அதிமுக, விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் பேரவையில் இருந்து வெளியேறினர். இதேபோல், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை, அம்மா கிளினிக் மூடல் உள்ளிட்டவற்றை கண்டித்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினரும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture