அ.தி.மு.க.வை கை விட்டது: பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த பா.ம.க.

அ.தி.மு.க.வை கை விட்டது: பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த பா.ம.க.
அ.தி.மு.க.வை கை விட்டது பாமக பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பாமக 2024 லோக்சபா தேர்தலுக்காக பாஜக கூட்டணிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வருகின்றன. வாக்கு சதவிகித ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் என்பது போல உருவான தோற்றம் சட்டென்று உடைந்து, பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்கிறது பாமக. அதிமுக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க, முன்னாள் அமைச்சர் சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. முதல் சந்திப்பிலேயே, 15 லோக்சபா + 1 ராஜ்யசபா என சொன்னார் ராமதாஸ். இந்த டீலிங்கை எடப்பாடி ஏற்கவில்லை.

தொடர்ந்து நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தையில், 5+1 அல்லது 8 லோக்சபா என்பதை எடப்பாடி முன்னிறுத்தினார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு பாமக தரப்பிடம் நேரடியாக பணம் தரப்படாது. அதிமுகவே பார்த்துக் கொள்ளும் என சொல்லப்பட்டது. இதையும் பாமக ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்த கூட்டணி கைகூடவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க கேட்டுள்ளதாம்.

இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதை பாமக ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.

பாமகவின் இந்த முடிவு கண்டிப்பாக அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும். வாக்கு சதவிகித ரீதியாக இது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக வடமாவட்டங்களில் சில தொகுதிகளில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம். பாமக 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய‌ வாக்கு சதவிகிதம் 3.80% தான். மொத்தமாக பார்த்தால் இது குறைவாக தோன்றினாலும் பாமக தொகுதி வாரியாக கணிசமான வாக்குகளை பெற்றது. 23 இடங்களில் பாமக போட்டியிட்ட நிலையில் அவர்களுக்கு 5 எம்.எல்.ஏக்கள் தான் கிடைத்தார்கள். அதே சமயம் 17 வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு சதவிகித அடிப்படையில் பார்த்தால் பாமக மிக அதிக அளவில் வாக்குகளை பெற்று உள்ளது.

இதில் கும்மிடிபூண்டி, பூந்தமல்லி (எஸ்சி), திருப்பூர், சோளிங்கர், காஞ்சிபுரம், ஆற்காட், திருப்பத்தூர், பென்னாகரம், தருமபுரி , கீழ்பென்னாத்தூர், வந்தவாசி (எஸ்சி), செஞ்சி, மயிலம், சங்கராபுரம், மேட்டூர் , சேலம் மேற்கு, ஆத்தூர் , ஜெயங்கொண்டம் , விருத்தாச்சலம் , நெய்வேலி, மயிலாடுதுறை, கீழ்வேளூர் (எஸ்சி) உள்ளிட்ட 22 தொகுதிகளில் 20 சதவிகிதத்திற்கும் மேல் பாமக வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில் 15 தொகுதிகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாமக பெற்று உள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 2021ல் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை விட அதிகம் எம்எல்ஏக்கள் பெற்றது. அதிலும் சேலம் (9/10), தர்மபுரி (5/5) இடங்களை வென்றது. இதற்கு காரணம் பாமகவின் வாக்குகள். சேலம், தருமபுரியை தூக்க அதிமுகவிற்கு உதவியாக இருந்ததே பாமகதான். பாமக இப்படி பல தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது , 30+ வாக்குகளை பெற்றதே அதிமுகவின் வெற்றிக்கு காரணம். முக்கியமாக வன்னியர்கள் அதிகம் உள்ள வடக்கு மண்டலத்தில் பாமக தீவிர ஆதிக்கம் செலுத்தியது. பாமக இல்லையெனில் சென்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 35 எம்எல்ஏக்கள் தான் பெற்று இருக்கும். இப்போது பாமக, பாஜகவிற்கு போய்விட்டால் அதிமுகவிற்கு கொங்கு பெல்ட் மட்டும் தான் பலம் என்ற நிலை ஏற்படும். அதிலும் வடக்கு மாவட்டங்களில் இரண்டாம் இடம் கூட பிடிக்க முடியாத சூழல் பாமகவிற்கு ஏற்படலாம்.

Tags

Next Story