அதிமுக பொதுக்குழு: விடிய விடிய நடைபெற்ற விசாரணை; விடியற்காலையில் தீர்ப்பு

AIADMK News Today - அதிமுக பொதுக்குழு கூட்டத்தை இன்று நடத்த அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை என உத்தரவிடப்பட்டது. தீர்மான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.
பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை அமல்படுத்த கூடாது என உத்தரவிடுமாறு பழனிசாமி தரப்பு கோரிய நிலையில், அதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மற்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்தாலும், அதனை தீர்மானமாக நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவால், ஒற்றைத் தலைமை குறித்த தனித் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிருந்த பழனிசாமி தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மரணதண்டனை வழக்குகளில் கூட, நள்ளிரவுக்கு முன்பே விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. ஆளால் ஒரு அரசியல் கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்கான விசாரணை விடிய விடிய நடைபெற்றது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஆச்சர்யமடைந்தனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu