சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் இனி வெற்றிடம் இல்லை. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்துவிட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சில கண்ட கனவுதான் தற்போது உடைந்துவிட்டது. ஆகஸ்ட்டுல் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும்.”என தெரிவித்தார்
“மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம். அமைதியாக உள்ள மாநிலத்தை சீர் குலைக்கும் நோக்கில் டி.கே. சிவக்குமார் செயல்படுகிறார். விவசாயிகளுக்கு உரிய நீரை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்.”என குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu