திருச்சியில் நாளை அ.தி.மு.க. பொன்விழா மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்
மதுரையில் ஆகஸ்டு 20ந்தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாகடு மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர் நடைபெறும் முதல் மாநாடு இது என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பான மாநாடு என்பதாலும் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டங்களில் அ.தி.மு.க. தலைமை கழக மற்றும் மூத்த நிர்வாகிககள் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சியில் நாளை (ஆகஸ்ட்1 )அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இது தொடர்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் தெய்வீக அருளாசியுடன் கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெறும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற திருச்சி மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் 1.8.2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திருச்சி கருமண்டபம் எஸ்.பி.எஸ்.மஹாலில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட மூத்த தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். கழகத் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் முனுசாமி,கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன்,கழக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கழக அமைப்பு செயலாளர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் சி வி.சண்முகம் எம்பி,கழக மகளிர் அணி செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கழக அமைப்பு செயலாளர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், கழக அமைப்பு செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,கழக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு கழக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்கழக பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார், கழக அமைப்பு செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் விபிபி பரமசிவம் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu