ஜனாதிபதி நிகழ்ச்சியை அதிமுக புறக்கணித்ததுக்கு காரணம் இது தானாம்
கருணாநிதியின் படத்திறப்பு நிகழ்ச்சியோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் அதிமுக புறக்கணித்ததுக்கு காரணம் தெரியுமா?
கருணாநிதியின் படத்திறப்பு நிகழ்ச்சியோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் அதிமுக புறக்கணித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா நேத்திக்கு நடந்தது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். விழாவின், முக்கிய நிகழ்வாக திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது.
கருணாநிதியின் புகைப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அது மடடமில்லாமல் முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிற்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்து புகழ்ந்து பேசினார்.
விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் தன் பங்குக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தின் பெருமையையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மிகப்பெரிய விழாவான இந்த நூற்றாண்டு விழாவில் எதிர்க்கட்சியான அதிமுக கலந்துக் கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் கலந்துக் கொள்வதால் அதிமுக கலந்துக் கொள்ளும் அப்படின்னு எல்லாரும் எதிர்ப்பார்த்த நிலையில், அதிமுக புறக்கணித்தது.
இதற்கு அவிங்க தரப்பு என்ன சொன்னாய்ங்கன்னா 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில், சட்டமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில், அப்போதைய எதிர்க்கட்சியான திமுக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தான் காரணமாம்.
அது மட்டுமில்லாமல் சுதந்திரத்திற்கு பிறகு 1952 ஆம் ஆண்டில் நடந்த முதல் சட்டமன்றத்தை தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அப்போதுதான் நாடு சுதந்திரம் பெற்று குடியரசாக இருந்தது. 1921 இல் நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது நிறுவப்பட்ட சட்டமன்றம் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அப்படின்னு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விழாவிற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமார், சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பதாக கூறினார். மேலும், சட்டபேரவை வரலாற்றி மாற்றி எழுதி திமுக விழா கொண்டாடுகிறது. ஜெயலலிதா படத்திறப்பு விழாவை திமுக புறக்கணித்த நிலையில், கருணாநிதி படத்திறப்பில் நாங்கள் எப்படி கலந்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu