ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு
X

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை வருகின்ற 24 -2 -2024 சனிக்கிழமையன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் சிறப்பாகவும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தி.மு.க. அரசை கண்டித்து சென்னை நவரசம் பன்னீர் கலைக் குழுவினரின் தெருமுனை பிரச்சார கலை நிகழ்ச்சிகளை திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் வருகிற 15ஆம் தேதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, 16ஆம் தேதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, 17ஆம் தேதி முசிறி சட்டமன்ற தொகுதி, 18 ஆம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடத்துவது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலும் கழக பொதுச் செயலாளர் ஆலோசனைப்படி கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு அயராது பாடுபடுவது.

மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முன்னதாக முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேல் மறைவுக்கு அஞ்சலி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Feb 2024 2:40 PM GMT

Related News